• Jul 23 2025

என்னது அடுத்த முதலமைச்சர் சூர்யாவா..? கடுப்பான சிவக்குமார்... ரசிகர்களுக்கு சூர்யா விடுத்த எச்சரிக்கை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது நடிகர்களினுடைய அரசியல் பயணம் குறித்துத் தான்.


அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்கப் போவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவரது செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இதனையடுத்து அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.


இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் சூர்யா தான் எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் சூர்யா தான் என்று  குறிப்பிட்டு போஸ்டரினையும் அடித்துள்ளனர். 


இதை பார்த்துக் கடுப்பான சூர்யாவின் தந்தை சிவக்குமார் "இது தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தும்" என சூர்யாவிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் ரசிகர்களிடம் "இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்" என எச்சரிக்கை செய்யும் வகையில் கூறியுள்ளாராம்.

Advertisement

Advertisement