• Jul 25 2025

இரத்தக்கறையுடன் வாள் மற்றும் துப்பாக்கி; அனல் பறக்கும் ‘பத்து தல’ சிம்புவின் லேட்டஸ் க்ளிக்ஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி உள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது எஸ் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக சிம்பு இருக்கும் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

மேலும் இப்போது படத்திற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு தயார் செய்து வருகிறதாம். மேலும் படம் குறித்து அப்டேட்க்காக சிம்பு ரசிகர்கள் காத்திருந்தார்கள்.இந்த சூழலில் பத்து தல படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. 

அதில் நீண்ட தாடியுடன் மாஸ் லுக்கில் சிம்பு உள்ளார். சிம்பு தொட்டி ஜெயா படத்தில் உள்ளது போல் வாயில் ரத்தக் கரையுடன் கத்தி வைத்தபடி ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.அதேபோல் மற்றொன்று கையில் துப்பாக்கியுடன் சிம்பு இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஆகவே இந்தப் படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும் இப்போது சிம்பு பழையபடி ஆக்ஷனில் பட்டையை கிளப்ப வந்துள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement

Advertisement