• Jul 25 2025

எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன டி ராஜேந்தர்! எப்படி இருக்கிறாரு பாருங்க

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்ட கலைஞர் தான் டி ராஜேந்தர். இவர் 80களில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நளினி, அமலா, ஜோதி, ஜீவிதா போன்ற பல நடிகைளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

பிரபல முன்னணி நடிகர் சிம்புவின் தந்தையான இவர் , தனது மகன் திருமணம் செய்து கொள்ளாதது நினைத்து கவலை படுவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என பல வதந்திகள் வருகிறது. ஆனால் தற்போது வரை அவருக்கு பெண் தேடும் வேலையில் தான் டிஆர் குடும்பம் பிஸியாக இருக்கிறது.

இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.

தமிழ்நாடு முழுவதும் தமிழர்  பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுபோல பல தலைவர்களும் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது பொங்கல் முன்னிட்டு டி ராஜேந்தர்பாடல் ஒன்றைப் பாடி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். 



Advertisement

Advertisement