• Sep 11 2025

'கை வைச்சு பாரு'....செருப்ப கழட்டி சாத்திருவேன்.' - சீமானை தாறுமாறாக கிழித்த விஜயலட்சுமி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடிகை விஜயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கும் சீமானுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. எனக்கு அவருக்கும் திருமணம் ஆகி இருந்தால் போட்டோவை வெளியிட சொல்லுங்க என நேற்றைய பிரஸ் மீட்டில் சவால் விட்டார் சீமான்.


இதற்கு பதிலடி கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகை விஜயலட்சுமி பேசியதாவது : “என்ன சொன்ன்னிங்க சீமான் அவர்களே, உங்க மேல வழக்கு தொடுத்த மாதிரி 6 பேர் மேல வழக்கு தொடர்ந்திருக்கேனா. நீ பண்ணிய பாவம் ஒன்னு ரெண்டு கிடையாது. கைவச்சு பாரு பார்க்கலாம்னு சவால் விடுற, என்ன ரெளடியிசம் பண்றியா. வாழ்க்கையில நீயும், நானும் நண்பர்கள் ஆக மாட்டோம், கடைசி நிமிஷம் வரைக்கும் நீயும் நானும் எதிரி தான்.


எனக்கு நீ எச்சரிக்கை விடாத. உன் எச்சரிக்கையெல்லாம் தூக்கி குப்பைல போடு. நான் என்னைக்கு கமிஷனர் ஆபிஸ்ல காலெடுத்து வச்சனோ, அன்னைக்கே நீ செத்த மாதிரி தான். எனக்கு 50 ஆயிரம் கொடுன்னு நான் உன் கிட்ட கேட்டேனா. நீ தான வந்த, 6 பேர நான் ஏமாத்திருக்கேன்னா, நீ 7வதா நாமம் போட்டுக்க வந்தியா. நீ திமிற திமிற நான் பயப்பட போவதில்லை. நீ என்னென்ன கேடுகெட்ட வேலை பண்றன்னு எல்லாருக்கும் தெரியும்.


ஈழப்போர்ல ஈழத்தமிழர்கள் செத்துக்கிட்டு இருக்கும் போது நீ என்கூட ஆட்டம் தான் போட்டுட்டு இருந்த. எல்லாம் வெளில வரதான் போகுது. நாவ அடக்கிக்கோ சீமான், ஒரு பெண்ணோட விஷயத்துல கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கோ. என் எதிர்ல மட்டும் நீ கிடைச்சன்னா பல்லெல்லாம் தட்டி கொடுத்துருவேன் சீமான். 6 பேர் கூட நான் குடும்ப நடத்திருக்கேன்னா அப்பறம் எதுக்குடா நீ வந்த. விளையாடிட்டு இருக்கியா. செருப்ப கழட்டி சாத்திருவேன்.


திமுக-வ எதுக்கு உள்ள இழுத்துட்டு வர. உனக்கு பேச முடியாம, இதுல அரசியல் பின்னணி இருக்குன்னு சொல்ற. என்னைய பத்தி அவதூறா நீ பேச பேச நான் அடங்கவே மாட்டேன் சீமான். வெறுப்பேத்தாத” என சீமானை பற்றி ஆவேசமாக பேசி நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தெப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement