• Jul 25 2025

என்ன அடிச்சு சாவடிச்சு இந்த இடத்தை எடுத்துக்கோ.! ரேங்கிங் டாஸ்க்கில் மாஸ் காட்டும் பிரதீப்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது.  தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ரேங்கிங் டாஸ்க் ஆரம்பமாகிய நிலையில் முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளார் பிரதீப்.

குறித்த ப்ரோமோவில் ரேங்கிங் டாஸ்க் தொடங்க பிரதீப் முதல் இடத்தில் நிற்க அதற்கு நீங்கள் தகுதி இல்லை என சக போட்டியாளர்கள் அனைவரும் சொல்லுகின்றனர்.

இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் பதில் அளித்த  பிரதீப், 'எனக்கு இந்த இடம் கண்டிப்பா தேவை. என்னை சாகடித்து விட்டு வேணுமானால் நீங்கள் இந்த இடத்தை எடுத்துக்கோங்க' என பதிலடி கொடுக்கிறார்.

இதேவேளை பல ரசிகர்களை கவர்ந்துள்ள  பிரதீப்புக்கு, வெளியிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement