• Jul 25 2025

கண்ணீர் விட்டு கதறிய தமன்.. எமோஷனல் ஆன வாரிசு படக்குழு...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

அத்தோடு  இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது. 

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.எனினும்  இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில், ரசிகர்களுடன் படம் பார்த்த பிறகு வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் எஸ் தமன் கண்ணீர் விட்டு கலங்கியது தொடர்பான விஷயம், தற்போது அதிக வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தின் ரிலீஸை முன்னிட்டு தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி, இசை அமைப்பாளர் எஸ் தமன், நடிகர் ஷாம், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்திருந்தனர்.அத்தோடு  இதில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படம் முடிவடைந்த பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.

அந்த சமயத்தில் படத்தின் இசை அமைப்பாளர் எஸ் தமன், வாரிசு படத்திற்கும், படக்குழுவினருக்கும் மக்கள் கொடுத்த வரவேற்ப்பை எண்ணி கண்ணீர் விடவும் செய்தார். இதனையடுத்து, தில் ராஜு உள்ளிட்டோர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றவும் செய்திருந்தனர்.





Advertisement

Advertisement