• Jul 23 2025

விஜய்யுடன் நெருக்கம் காட்டும் தமன்னா... இரவு நேரத்தில் ரகசிய டேட்டிங்... கையும் களவுமாக பிடிபட்ட வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமீபகாலமாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யவில்லை. 


கடந்த ஜனவரி மாதம் கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தமன்னா, அதில் நடிகர் விஜய் வர்மாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகியமைத் தொடர்ந்து தான் இவ்வாறான காதல் கிசுகிசுக்கள் உலா வந்தன.


இதனையடுத்து தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு ஜோடியாக சென்ற தமன்னாவும், விஜய் வர்மாவும், பின்னர் காரில் ஒன்றாக கிளம்பி சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் வெளியாகி இருக்கின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் "இனியும் நீங்கள் மௌனம் காப்பதில் பலனில்லை, உங்கள் காதல் எங்களிற்கு தெரிந்து விட்டது" எனக் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement