• Jul 24 2025

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெருக்கூத்துக் கலைஞராக பல நாடகங்களில் நடித்து கிராமப்புற மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நெல்லை தங்கராஜ். நாடக கலைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்த நிலையில், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவிலும் நெல்லை காலடி எடுத்து வைத்தார். 


அதாவது இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான 'பரியேறும் பெருமாள்' படத்தில் ஹீரோ கதிரின் அப்பாவாக வித்தியாசமான ரோலில் நடித்திருப்பார். அப்படத்தில் பெண்ணாக கூத்துக் கட்டும் கலைஞர் தன் மகனை பார்க்க கல்லூரிக்கு வரும் போது அவரது வேட்டியை உருவி மானபங்கம் படுத்தும் காட்சிகள் பல ரசிகர்களின் கண்களில் கண்ணீரை அருவியாக கொட்ட வைத்திருக்கும்.


இவ்வாறு பிரபல தெருக்கூத்து கலைஞராகவும், நடிகராகவும் திகழ்ந்து வந்த நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்தது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது ஏழ்மை உடன் போராடி வந்த நிலையில், உடல்நலக் குறைவும் நெல்லை தங்கராஜை போட்டு வதைத்து வந்த நிலையில், அவர் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இவ்வாறு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இவர் காலமான செய்தி சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மறைந்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜுக்கு தங்களுடைய இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement