• Jul 23 2025

விரைவில் OTT தளத்தில் டாடா திரைப்படம் ... வெளியானது ரிலீஸ் தேதி!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவரது நடிப்பில் சமீபத்தில் டாடா திரைப்படம் வெளியானது. 

கணேஷ் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி லோ பட்ஜெட் திரைப்படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி டாடா திரைப்படம் இம்மாதம் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் - சிம்ப்ளி சவுத் ott தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement