• Jul 25 2025

தந்தை - மகன் சென்டிமென்டில்...சமுத்திரக்கனியின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள விமானம் படத்தின் டீசர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமுத்திரக்கனி மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் விமானம். இந்த திரைப்படம் ஜூன் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தாயை இழந்த ஒரு மகனை தனி ஆளாக வளர்க்கும் மாற்றுத்திறனாளி தந்தையாக சமுத்திரக்கனி நாடிருக்கிறார். அப்பா மகன் சென்டிமென்டில் உருவாக்கி உள்ள இந்த படத்தில், தன்னுடைய 10 வயது மகன் விமானத்தில் பறக்க ஆசைப்படும் நிலையில், அவருடைய கனவு நிறைவேறியதா என்பதை ஆழ்ந்த கருத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்.

மேலும் அம்மா சாமி கிட்ட போயிட்டாங்க என்று சொல்லும் சமுத்திரக்கனியிடம், அம்மா விமானத்தில் ஏறி தான் சாமிகிட்ட போனார்களா? என மகன் வெகுளித்தனமாக கேட்கும் காட்சிகள் படத்தை  ரசிக்க வைக்கிறது. செண்டிமெண்ட் என்பதை தாண்டி சிறுவர்களின் சேட்டைகளும், இந்த படத்தின் கதை களத்திற்கு உயிர் கொடுத்துள்ளது டீசரை பார்த்தாலே உணர முடிகிறது. 

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை சிவப்பிரசாத் இயக்கி உள்ளார். சரண் அர்ஜூன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 9 தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement