• Jul 25 2025

ஐஸ்வர்யா ராஜேஷிடம் இதை சொன்னாலே ரொம்ப டென்சன் ஆகிடுவா- தொகுப்பாளினி டிடி சொன்ன சுவாரஸியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சியானது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சியானது முடிந்து விடும் என்பதோடு யார் டைட்டில் வின்னர் என்பதையும் அறிந்து விடலாம். இதற்காக ஹவுஸ்மேட்ஸ் மாத்திரம் அல்லாது ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக நேற்றைய தினம் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி சென்றிருந்தார். அவர் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தம்முடைய பார்வையை பகிர்ந்து கொண்டார். அப்போது போட்டியாளர் மணிகண்டன் ராஜேஷ் பற்றி பேசிய டிடி, “ஐஸ்வர்யா ராஜேஷ் பலருக்கு தெரியும்.


ஆனால் அவருடைய பின்னணியில் இருந்து ஒருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பது பலகாலம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. உண்மையில் பெரிய விஷயம். உங்கள் தம்பி உறுதுணையாக இருக்கிறார் என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறும் பொழுதெல்லாம் டென்ஷன் ஆவார், அவர் தம்பி இல்ல அண்ணன் என டென்சனாவார்" என்று விளையாட்டாக கூறினார்.

மணிகண்டன் ராஜேஷ் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பதும், பிரபல சீரியல் நடிகையின் சோஃபியாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement