• Sep 13 2025

கவர்ச்சி நடிகைகளை அலேக்காக தூக்கிய தெலுங்கு பிக்பாஸ்... பரிதாபத்திற்குள்ளான தமிழ் பிக்பாஸ்.. அட இவங்களும் இல்லையா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது. 


இந்நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நேற்று முன் தினம் ஆரம்பமானது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஷகிலா, நடிகை கிரண், பிரியங்கா ஜெயின், பாடகி தாமினி பட்லா, யூடியூபர் டேஸ்டி தேஜா, டான்ஸர் ஆட்டா சந்தீப், இசையமைப்பாளர் போலே ஷவாலி, இளம் விவசாயியாக அறியப்படும் பல்லவி பிரஷாந்த், டாக்டர் கௌதம் கிருஷ்ணா, சுபஸ்ரீ, சின்னத்திரை நடிகர் பிரின்ஸ் யாவர், அமர்தீப், அர்ஜுன் அம்பதி, ஷோபனா ஷெட்டி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.


அந்தவகையில் இதில் கலந்து கொண்ட நடிகை ஷகிலா, மற்றும் நடிகை கிரண் ஆகிய இருவரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தெலுங்கு ஷோவில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருப்பது தமிழ் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


இவர்களைப் போலவே ஏற்கெனவே இணையத்தில் பெயர் கசிந்த மாகாபா ஆனந்த், ரஞ்சித், தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, பப்லு, ரேஷ்மா நாயர், ரச்சிதா கணவர் தினேஷ் ஆகியோரும் உண்மையாகவே கொள்கிறார்களா இல்லையா..? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் துளி விட ஆரம்பித்து விட்டது.

Advertisement

Advertisement