• Jul 24 2025

சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டேவின் திரைப்படத்திற்கு வந்த சோதனை- அடடே பெயரையே மாத்தியாச்சா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது.

இந்த நிலையில் இவர் இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'சர்க்கஸ்' படத்தில் நடித்து வருகின்றார்.ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கிறிஸ்மஸ் வெளியீடாக வர உள்ளது.


இப்படத்தைத் தொடர்ந்து  மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக 'SSMB28' படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.இது தவிர ஹிந்தி நடிகர் சல்மான் கான் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 'கபி ஈத் கபி தீபாவளி' எனப் பெயரிடப்பட்டு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள வைல் பார்லேயில் தொடங்கியது.


இதில் பூஜா ஹெக்டே சல்மான் கான் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு டிசம்பரில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் லுக் டீஸர் வெளியாகி உள்ளது.பர்ஹத் சம்ஜி இந்த படத்தினை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement