• Jul 26 2025

ஹீரோவாக அறிமுகமாகும் TFF வாசன்... ஹீரோயின் யார் தெரியுமா... ரசிகர்களுக்கு வெளியானது குட் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி, யூடியூப் பக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் தான் கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம்.


மேலும் அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.

பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், செம்ம கெத்தாக அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.அந்தவகையில் அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்சமீபத்தில் வெளியானது.


அந்தவகையில் அவர் நாயகனாக அறிமுகமாகும் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தை செல்அம் என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் TFF வாசனுக்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

இந்நிலையில் இவருக்கு ஜோடியாக மற்றொரு யூடியூப் பிரபலமான அமலா ஷாஜி நடிக்க வாய்ப்பு இருப்பாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்கான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் தற்போது தகவல் ஒன்று தீயாய்ப் பரவி வருகின்றது.


Advertisement

Advertisement