• Jul 24 2025

துணிவு படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் -செம குஷியில் இருக்கும் அஜித் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இயக்கிய இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இதுதவிர அதில் வங்கிகள் மக்கள் பணத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தனர். 

இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.துணிவு படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இவர்களுடன் பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், ஜிபி முத்து, சிபி, மமதி சாரி ஆகியோரும் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், ஜி.எம் சுந்தர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து இருந்தது. இதனால் முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலை வாரிக் குவித்து இருந்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் ரூ.19 கோடி வசூலித்து வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருந்தது .

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இரண்டாம் நாளில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் ரூ. 37 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வாரிசு படத்தை முந்தியுள்ளது என கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement