• Jul 24 2025

தமிழ்நாட்டில் தல தான் டாப்.. துணிவு படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!- ஆட்டம் போடும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படம் இன்றுதமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணிக்கே வெளியானது. முதல் பாதி முழுவதும் அஜித்தின் வில்லன் ரோல் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

 மேலும் படத்தில் மீண்டும் பழைய வில்லன் அஜித்தை பார்த்த ரசிகர்கள் தல தாறுமாறு என முதல் பாதி முழுவதும் எந்தவொரு வசனமும் காதில் விழாத அளவுக்கு ஆரம்பம் முதல் முடிவு வரை கத்தி கூச்சலிட்டும், விசில் அடித்தும் தியேட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.

 இயக்குநர் வினோத் இரண்டாம் பாதியில் வங்கியில் நடக்கும் மோசடிகளையும் கிரெடிட் கார்டு மூலம் உங்கள் பணம் எப்படி களவு போகின்றது உள்ளிட்ட டீட்டெய்லிங் கதையை சொல்லி கிளாஸ் எடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் இந்த முறையும் முதல் நாள் வசூலில் நடிகர் அஜித் தான் முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு காட்சி கூடுதல் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ப்ரீ புக்கிங்கிலேயே 10.21 கோடி வசூல் வந்துள்ளது. 1650 ஷோக்கள் திறக்கபட்ட நிலையில் 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. முதல் நாளில் 22 கோடி முதல் 26 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் 20 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் புக்கிங்கிலேயே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் முடிவில் துணிவு திரைப்படம் 28 கோடி முதல் 32 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை இரு படங்களின் தயாரிப்பு தரப்பும் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement