• Jul 26 2025

தளபதி 67 ப்ரோமோ இப்படித்தான் இருக்க போகுதா..? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதையடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது நாம் அறிந்ததே. அத்தோடு இப்படத்தில் மிஸ்கின், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்க போகிறார்கள் என்று அவர்களே பேட்டியில் கூறினார்கள்.

அத்தோடு  இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


எனினும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் , தளபதி 67 குறித்து ஹிண்ட் கொடுத்தார். அதாவது வரும் பிப்ரவரி 1, 2, 3 தினங்களில் படத்தின் அப்டேட் இருப்பது போல் கூறினார்.

தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஷூட் பிப்ரவரி 3 -ம் தேதி வெளியாகவுள்ளதாக பல செய்திகள் வெளிவந்த நிலையில் தளபதி 67 படத்தில் ப்ரோமோ ஷூட் குறித்து அப்டேட் ஒன்று  தற்போது வந்துள்ளது.

அது என்னவென்றால் 50 ரௌடிகளை அடிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு கடைசி காட்சியில் விஜய் பஞ்ச் டயலாக் உடன் முடிப்பார் என்று கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement