• Jul 23 2025

ஆண்களுக்கு மட்டும் இலவச பேருந்து டிக்கெட்டுக்களை வழங்கி.. மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர் திரையுலகில் அறிமுகமாகி தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இதனை விஜய்யின் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.


அந்த வகையில் மதுரையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் ஆனது அரசு பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி சிறப்பித்து உள்ளனர்.

அதாவது அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அரசு அறிவித்துவிட்டதால், அதில் பயணிக்கும் ஆண்களுக்கு மட்டும் அவர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அந்த இடத்துக்கான டிக்கெட்டை இலவசமாக வாங்கி கொடுத்துள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.


அதுமட்டுமல்லாது விஜய் திரையுலகில் வந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தோஷமாக கொண்டாடினர்.


அவர்களின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அத்தோடு இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement