• Jul 25 2025

விஜய் அன்டனியை தூக்கி போட்ட பிரபலம்... மோகன் ஜிக்கு மட்டும் தானா மரியாதை...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.


எனினும் அவரது மனைவியான கிருத்திகா உதயநிதி, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் உதயநிதி தான் அந்த நிறுவனத்தில் எந்த திரைப்படங்களை வெளியிடலாம், எந்த திரைப்படங்களை வெளியிடக்கூடாது என்பதை முடிவு செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


சமீபத்தில் மோகன் ஜீ இயக்கத்தில் உருவான “பகாசூரன்” படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியிருந்ததை அனைவரும் அறிந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான “இரத்தம்” படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்க அப்படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் உதயநிதியை அணுகியிருக்கிறார். ஆனால் உதயநிதி வாங்க மறுத்துவிட்டாராம்.


இந்த நிலையில் இத்தகவலை பகிர்ந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, “எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் கொள்கைக்கு மாறாக இருக்கும் ஒரு திரைப்படத்தை அவர்கள் வாங்குகிறார்கள். ஆனால் திமுக குடும்பத்தை சேர்ந்த ஒருவருடைய படத்தை வாங்க மறுத்துவிடுகிறார்கள்” என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


Advertisement

Advertisement