• Sep 11 2025

மிகவும் அசாதாரண முயற்சிகளை செய்திருக்கிறீங்க ரொம்ப நன்றி- அர்ஜுனைப் பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உஐவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார் .கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது.

இந்நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவையும் வெளியாகி மாஸ் காட்டின. இதனை அடுத்து முக்கியமான வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அவரது கேரக்டர் ஆண்டனி தாஸ் என்பது வெளிப்படுத்தப்பட்டது.


இந்நிலையில் இன்றைய தினம் அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி படத்தில் அடுத்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் அவர் ஹரோல்ட் தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் படத்தில் சஞ்சய் தத்தின் தம்பி என்பது முன்னதாகவே வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் முன்னதாக வெளியான லோகேஷின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டரை பிரதிபலிக்கும் வகையில் தற்போது ஹரோல்ட் தாஸ் கேரக்டர் அமைந்துள்ளது.

ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா செய்வது போல, ஹரோல்ட் தாசும் கேங்ஸ்டராக சம்பவம் செய்கிறார். அதே வெறித்தனம் அர்ஜூன் முகத்திலும் காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் அசாதாரணமான முயற்சிகளை அர்ஜூன் செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதற்காக அவர் அர்ஜூனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜூனுக்கு வாழ்த்துக்களையும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement