• Jul 25 2025

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி- மார்க் ஆண்டனி பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து வீடியோவைப் பதிவிட்ட விஷால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் செல்லமே என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் விஷால். இவர் இதனைத் தொடர்ந்து  சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தனர்.


இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடிகர்கள் நோக்கி வந்து விபத்துக்குள்ளானது.


இந்நிலையில் நடிகர் விஷால், தமது டுவிட்டர் பக்கத்தில், "சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. இந்த சம்பவத்தால் என் கால்கள் படப்பிடிப்பில் மரத்து போய்விட்டன." என விபத்து குறித்து விஷால்  டுவிட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement