• Jul 24 2025

அந்த நடிகை தான் என்னுடைய கிரஸ்.. வெளிப்படையாக பதில் சொன்ன சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியாக உள்ள கஸ்டடி திரைப்படத்தில் நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

 ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் கஸ்டடி படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கிர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் கதையில் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கப் போகிறது என்பதை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 கஸ்டடி திரைப்படம் மே 12ந் தேதி திரையில் வெளியாக உள்ள நிலையில் பிரபல யூடியூபரான இர்பானுடன் ட்ரூட் ஆர் டேர் என்ற விளையாட்டில் கலந்து கொண்டார். அதில் வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்பட்ட விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த நாக சைத்தன்யா, என் வாழ்க்கையில் எதற்கும் நான் வருத்தப்பட்டது கிடையாது. எல்லாமே வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் என்றார்.

மேலும், ரகசிய கிரஷ் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாக சைத்தன்யா, கிரஷ் இல்லை என்றும், அப்படி இருந்து இருந்தால் ஓப்பனாக சொல்லி இருப்பேன். ஆனால், நான் கடைசியாக ஒரு ஆங்கில படம் Babylon பார்த்தேன். அதில், நடித்த நடிகை மார்கோ ராப்பி தான் தன்னுடைய கிரஷ் என்று கூறியிருந்தார். மேலும், எத்தனை பேர் உங்களுக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார்கள் என்று இர்பான் கேட்க, நிறைய பேர் இருக்கிறார்கள் அதை நான் கணக்கு வைத்துக்கொண்டது இல்லை என பதில் அளித்தார்.

 இதையடுத்து, நாகசைத்தன்யா இர்பானிடம், உங்களை எந்த பொண்ணாவது வேண்டாம் என்று சொன்னாங்களா என்று கேட்டார். இதற்கு, இர்பான் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு பெண், உனக்கும் எனக்கும் செட் ஆகாது, இதனால் நண்பர்களாக இருப்போம் என்று கூறினார். இதைக்கேட்ட நாகசைத்தன்யா டென்ஷனாகி, உங்ககிட்ட நான் பிரன்ஷிப்பை கேட்கலையே என்றும் இந்த வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகிறது என்று பதில் அளித்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் சமந்தாவை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த பதிலை அளித்தார் என்று பேசி வருகின்றனர்.

Advertisement

Advertisement