• Jul 26 2025

திருமணத்திற்கு பிறகு மஞ்சிமா-கெளதம் ஜோடி செய்த அந்த நல்ல விஷயம் - ரசிகர்கள் வாழ்த்து!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடல் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். இவர் இதை தொடர்ந்து ரங்கூன்,என்னமோ ஏதோ, இருட்டறையில் முரட்டு குத்து, தேவராட்டம் என எக்கச்சக்க படங்களில் நடித்து அசத்தி இருத்தார் . 

இந்நிலையில் இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தேவராட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து திண்டுக்கல் பழனி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளனர்.மேலும் இவர்கள் மலை அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள முருகனை தரிசிக்க ரோப் காரில் வந்துள்ளனர்.

இவர்களை கோவிலில் பார்த்த பக்தர்கள் இவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக கூட்டமாக சூழ்ந்துள்ளனர். இதன் பிறகு இவர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது கோயில் நிர்வாகம். பின் சாமி பிரசாதத்தை வாங்கி விட்டு மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இவர் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கும் பத்து தல படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement