• Jul 24 2025

அந்த மனசு தான் சார் கடவுள்.. மாற்றுத்திறனாளி ரசிகரை குஷிப்படுத்திய விஜய்- என்ன செய்தார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.அத்தோடு இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்து வருகின்றார்.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.


முதல்கட்ட சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் (ரசிகர்கள்) விஜய்யை சந்தித்து  புகைப்படங்கள் எடுத்தனர்‌. இன்றைய அடுத்த கட்ட சந்திப்பில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.  அடையாள அட்டை வைத்துள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்நிலையில் இந்த சந்திப்பில் நடிகர் விஜய், ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது  டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
















Advertisement

Advertisement