• Jul 25 2025

பாய்ஸ் படத்தில் அந்த நிர்வாண காட்சி..அலறியடித்து ஓடிய ஹீரோயின் அம்மா - நடிகர் சித்தார்த் ஓபன் டாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தில் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சித்தார்த்.

தற்போது கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள டக்கர் படத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். 

இத்திரைப்படம் ஜூன் 9ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. டக்கர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசி சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். 

அதில், பாய்ஸ் படத்தில் காதலி ஜெனிலியாவை இம்ரஸ் செய்ய ஆடை இல்லாமல் மவுண்ட் ரோடில் ஓடும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சிக்காக இரண்டு விதமான உள்ளாடையை அணிந்து இருப்பேன். இதில் ஒரு ஆடை உடம்போடு அப்படியே ஒட்டி இருக்கும். அதை கழட்டும்போது ஹீரோயின் அம்மா பார்த்து அலறி ஓடிவிட்டார்கள் என்று நகைச்சுவையாக கூறினார் . இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement