• Jul 25 2025

அந்த விஷயம் ரொம்ப கஷ்டம் தான் ஆனால் நீங்களும் சரியாக பார்த்துக்கோங்க- ஸ்பெஷல் அட்வைஸ்ட் கொடுத்த சன்னி லியோன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” இப்படத்தில் இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் பிரபல சேனலுக்கு ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். 


இதில், “அழகுத்துறையில் ஒரு நடிகை என்பதை தாண்டி, ஒரு அழகான தாய் என்பது எளிமையான வேலை அல்ல. உங்கள் குழந்தைகளை எப்படி கவனிக்கிறீர்கள்?” என நடிகை சன்னி லியோனிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “அவ்வளவு எளிதல்ல தான்.மூன்று குழந்தைகளை கவனிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல தான். ஆனால் நிறைய மனிதர்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். 


பலர் கூட்டுக் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் அதிக நபர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். அதை நாம் எப்படியேனும் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. நாம் தான் நம் குடும்பத்தினர், சகோதர சகோதரிகள், மாமா அத்தை, பெற்றோர் ... என நாம் அனைவரையும் பார்க்க வேண்டும்.டேனியல் அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கொள்வார். அவருக்கு எல்லாமே குடும்பம்தான். நீங்களும் அம்மாவை பார்த்துக்கணும்” என சன்னி லியோன் அட்வைஸ் செய்து குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement