• Sep 13 2025

அடேங்கப்பா...நடிகர் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் ரசிகர்கள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர். இவர் தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்தார், ஆனால் படத்திற்கு சரியான ரீச் வரவில்லை.

இவரது அப்பா கிருஷ்ணா நடிப்பில் வெளியான நீடா, போராட்டம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேஷ் பாபு 1999ம் ஆண்டு வெளியான ராஜகுமாருடு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு புதிய படங்களுக்கு 80 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2005ம் ஆண்டு நடிகை நம்ரதா சிரோத்கரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு கவுதம் மற்றும் சித்தாரா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இன்று அவர் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு, தியேட்டர் என ஒட்டுமொத்தமாக ரூ. 256 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement