• Jul 25 2025

அது குப்ப படம் சார்.., காரி துப்பியும் திருந்தல..விமர்சித்த பிரகாஷ் ராஜ்! பதில் கொடுத்த இயக்குநர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து  கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மத்திய அரசுக்கு செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டி காட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ், கடந்த ஆண்டு விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்து சர்வதேச சங்கம் காரி துப்புகிறது.

இப்படி காரி துப்பியும் திருந்தாமல் அந்த படத்தின் இயக்குநர் ஆஸ்கர் விருது கொடுக்க வில்லை என்று வருத்தப்படுகிறார் என்று பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தற்போது பிரகாஷ் ராஜ்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

என்னவெனில் , தி காஷ்மீர் பைல்ஸ் சின்ன படமாக இருந்தாலும், அர்பன் நக்சல்ஸ்களை தூங்க விடாமல் செய்துள்ளது. இப்படம் வெளியான போது ஒரு நபர் இந்த படத்தை பார்ப்பவர்களை குரைக்கும் நாய் என குறிப்பிட்டு பேசியவர் ஒரு வருடத்துக்கு பிறகும் கஷ்டப்பட்டு வருகிறார். தமிழ் விஞ்ஞானி பிரகாஷ் (இருள்) ராஜ் இருக்கும் பொழுது ஆஸ்கர் விருது என்ற பாஸ்கர் எனக்கு எப்படி கிடைக்கும் என்று பிரகாஷ் ராஜுக்கு நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி .


Advertisement

Advertisement