• Jul 25 2025

இதனால் தான் கடனாளி ஆனேன், அவரே சொன்ன உண்மைச் சம்பவம்... கொந்தளிப்பில் கே. ராஜன்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் தயாரிப்பாளர் வி.ராஜாவை ஒரு நிகழ்வின் போது பாராட்டி பேசி இருந்தார். அவர் அவன் இந்த படத்தை முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டான்,  தோராயமாக 3 கோடி செலவாச்சு அதில் 10 லட்ஷம் இல்லாமல் என்னிடம் வந்தான்.


நான் என்னிடம் இருந்த பணம் எல்லாத்தையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுத்து விட்டு நான் என் தேவைக்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறேன். அவனிற்கு உதவ முடியவில்லை." என்று கூறினார். 


மேலும் அவர் கூறுகையில் தாணு கூறினார் என்னிடம் சரியான ஆட்களுக்கு காசு கொடுக்காமல் நீங்க தவறு செய்கிறீர்கள் நான் சொல்பவர்க்கு கொடுங்கள் வட்டி கரெக்டா வரும் என்று. அதற்கு நான் சொன்னேன் பெரிய ஆட்களுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்குவதை விட முளைத்து வரும் பிள்ளைகளுக்கு கொடுத்தால் என் பணம் மூலம் ஒரு படம் வந்தால் அதுவே எனக்கு பெருமை என்று கூறினார்.


இவ்வாறு நான் பணம் கொடுத்து எதுவும் கிடைக்கவில்லை அங்க அங்கேயே இருக்கு, ஆனால் ராஜாவிற்கு கொடுக்க முடியவில்லை என்று கவலை பட்டேன். ராஜா ஒரு வேகம், விவேகமானவன். அவனுக்கே இந்த கதி என்று இருந்தது. ராஜா அன்பிற்கு இணையானவன், வள்ளுவன் வகுத்த நட்பிற்கு நிகரானவன்.


நடிப்பினால் நட்பு வராது. அது உண்மையான மனசில தான் வரும் என்று ராஜாவை புகழ்ந்து பேசினார். எங்களுடைய தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பார்த்துட்டு இருக்கமாட்டோம். என்னிடம் பணம் வாங்கி விட்டு தயாரிப்பாளரை கஷ்டப்படுத்துறீங்க, தயாரிப்பாளர் இல்லையென்றால் படமே இல்லை என்று கொந்தளித்து பேசினார்.


Advertisement

Advertisement