• Jul 25 2025

படப்பிடிப்பில் திடீர் வெடி விபத்து.. 27 வயதான இளம் நடிகை கவலைக்கிடம்.. பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வங்காள தேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஷர்மீன் அகீ. 27 வயதுப் பெண்ணான இவர் 'சின்சியர்லி யுவர்ஸ்', 'டாக்கா', 'பைஷே ஸ்ரபோன்' மற்றும் 'பாண்டினி' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக குறுகிய காலத்தில் உயர்ந்தார்.


இந்நிலையில் இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் உடைய படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் இவர் இருந்த மேக்கப் அறையில் உள்ள ஏதோ ஒரு பொருள் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில் சிக்கிய அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர் விரைந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 35 சதவீத தீக்காயம் ஷர்மீன் அகீக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 


அதுமட்டுமல்லாது ஷர்மீனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளார். 


அத்தோடு அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது படப்பிடிப்பின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement