• Jul 25 2025

7ஆவது குழந்தைக்குத் தந்தையான 79 வயது நடிகர்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராபர்ட் டி நீரோ. இவர் 'தி ஐரிஷ்மேன்', 'தி காட்பாதர் பார்ட் II’, 'ரேஜிங் புல்,' 'டாக்ஸி டிரைவர்' போன்ற பல படங்களின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.


இந்நிலையில் தற்போது 79 வயதாகும் இவர் ‘அபவுட் மை ஃபாதர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மே 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இதற்கான விளம்பரப் பணிகளில் ராபர்ட் டி நிரோ ஈடுபட்டு வருகிறார். 


அந்தவகையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்திருப்பது குறித்து அறிவித்திருக்கிறார். அதாவது அவர் பேசுகையில் "குழந்தைகள் பிறப்பதை சட்டம் வகுத்து கட்டுப்படுத்த முடியாது. அது எனக்கு மட்டுமின்றி எந்த பெற்றோருக்கும் பிடிக்காத ஒரு விடயம். எனக்கு ஏழாவது குழந்தை சமீபத்தில் தான் பிறந்தது. நான் தற்போது ஏழு குழந்தைகளுக்கு தந்தையான போதிலும் மேலும் குழந்தை பெற்றுக் கொள்வதை  விரும்புகிறேன்" எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக 7குழந்தைக்கு தந்தையான இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement