• Jul 26 2025

மிரள் பட இயக்குநருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான 'மிரள்' படத்தின் இயக்குநர் சக்திவேல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையா பெற்று வரும் தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகர் பரத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் 'மிரள்'. மேலும்  இதில் வாணி போஜன் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பரபரப்பான காட்சிகளுடன் 115 நிமிடங்கள் ஒளிபரப்பான இந்த திரைப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கியிருந்தார்.


மேலும்  இந்த படத்தை டெல்லி பாபு ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே, இயக்குனர் சக்திவேலின் கதை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது மட்டுமின்றி படமும் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இவ்வாறுஇருக்கையில்  இந்த படத்தின் இயக்குநர் சக்திவேல் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சக்திவேலுக்கு பாம்பு கடித்ததன் காரணத்திற்காக தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும்  இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது உடல் நலமுடன் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement