• Jul 24 2025

நீச்சல் குளத்தில் மனைவியை கட்டியணைத்து துணிவு பட நடிகர் செய்த செயல்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து மிரட்டிய நடிகர் ஜான் கொக்கன் துணிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் , தனது மனைவியுடன் நீச்சல் குளத்தில் முத்தக் குளியல் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

துணை நடிகராகவும் அடியாளாகவும் நடித்த வந்த ஜான் கொக்கனுக்கு மிகப்பெரிய ரோல் என்றால் அது சார்பட்டா பரம்பரை படத்தில் அவருக்கு கிடைத்த வேம்புலி கதாபாத்திரம் தான்.அத்தோடு  ஆறடி உயர ஹல்க் மாதிரி இருக்கும் ஜான் கொக்கன் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவ்வாறுஇருக்கையில், அஜித்தின் துணிவு படத்திலும் ஜான் கொக்கனுக்கு முக்கிய ரோல் கிடைத்துள்ளது.

அத்தோடு அஜித்தின் வீரம் படத்திலேயே அடியாளாக நடித்திருந்த ஜான் கொக்கன் துணிவு படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், துணிவு படத்தின் டப்பிங் முடிந்தது என்றும் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை கூறியுள்ளார். இவ்வாறுஇருக்கையில், தனது மனைவியுடன் ஜாலி பண்ணும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

எஸ் எஸ் மியூசிக் விஜேவான பூஜா ராமசந்திரன் சக விஜேவான கிரெய்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கிரெய்கை விவாகரத்து செய்த பூஜா அடுத்து ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர்  இருவரும் ரொம்பவே நெருக்கமாக வாழ்ந்து வருவதை அடிக்கடி புகைப்படங்களாக  போட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடிக்கடி பிகினி உடைகளை அணிந்து கொண்டு நீச்சல் குளம் அருகே பூஜா ராமசந்திரன் தனது கணவர் ஜான் கொக்கனுடன் போஸ் கொடுத்த வந்த நிலையில், தற்போது கணவரை கட்டி அணைத்துக் கொண்டு அவருடன் படு ஜாலியாக குளிக்கும் வீடியோவையே ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

நீச்சல் குளத்தில் கணவனும் மனைவியும் மாறி மாறி முத்த மழை பொழிந்துள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளனர்.அத்தோடு  இதெல்லாம் ரொம்ப மோசம்ப்பா வேம்புலி என ரசிகர்கள் வயித்தெரிச்சல் படுவது போன்ற கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். மேலும், உங்க ஜோடி செம சூப்பர் பார்க்கவே பொறாமையா இருக்கு என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அஜித்தின் துணிவு, ஹன்சிகாவின் ரவுடி பேபி என பிசியாக நடித்து வருகிறார் ஜான் கொக்கன். அத்தோடு மனைவி பூஜா ராமசந்திரன் உடன் அவர் நீச்சல் குளத்தில் செய்யும் ரொமாண்டிக் சேட்டை வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியே சந்தோஷமா இருங்க என வாழ்த்தி வருகிகின்றனர். லைக்குகளும், ஹார்ட்டீன்களும் எகிறி உள்ளன.



Advertisement

Advertisement