• Jul 25 2025

காதலிக்காக போதையை போட்டு இயக்குநரை அடித்த நடிகர்.. மார்க்கெட் போனதால் கடைசியில் பிரேக்கப்பா...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நீ இல்லாமல் நான் இல்லை என்ற வசனம் பேசி உருகி உருகி காதலித்த அந்த ஜோடி இப்போது பிரேக்கப் செய்து பிரிந்து இருப்பது தான் திரையுலகில்  பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சினிமாவில் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆன பலருக்கும் நிஜ வாழ்விலும் கெமிஸ்ட்ரி கன்னா பின்னாவென வேலை செய்யும். அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல என்று காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தவர்கள் தான் அந்த பிரபல ஹீரோ, ஹீரோயின்.

அறிமுகமான படத்திலேயே நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்த அந்த நடிகை சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு வலம்  வந்தார். ஆனால் இப்போது அவருக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. அதனாலேயே அந்த நடிகை இப்போது வெப் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

அதுமட்டுமல்லாமல் நடிகை விரைவில் காதலித்தவரை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்த வேளையில் திடீரென காதலரை விட்டு பிரிந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.எனினும்  இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நடிகை அதைப்பற்றி வாய் திறக்காமல் இருந்தார். ஆனால் இப்போது இந்த பிரேக்கப்புக்கு பின்னணியில் என்ன நடந்தது என்ற கதை தான் கோடம்பாக்கம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது நடிகை தன் காதலருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்த போது ஒரு காட்சியில் அதிக டேக்குகள் வாங்கி உள்ளார். ஆனாலும் அந்த இயக்குநர் அவரை நடிக்க சொல்லி டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் கடுப்பான நடிகையின் காதலர் குடிபோதையில் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அந்த இயக்குநரை பளார் என ஒரு அறை விட்டு உள்ளார்.

இதனால் அந்த இடமே ரணகளமாக மாறி உள்ளது. அதன் பின்னர் நடிகை படாத பாடுபட்டு இந்த பிரச்சனையை சரி செய்து இருக்கிறார். ஆனாலும் நடிகையின் காதலருடைய இந்த குடிப்பழக்கம் அவருடைய மார்க்கெட்டுக்கே வேட்டு வைத்திருக்கிறது. பொறுத்து பொறுத்து பார்த்த நடிகை இப்போது உன் சகவாசமே வேண்டாமென்று பிரேக் அப் செய்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் சென்னையை காலி செய்துவிட்டு பக்கத்து மாநிலத்தில் குடி புகுந்து விட்டாராம்.

Advertisement

Advertisement