• Jul 26 2025

துணை இயக்குநரை கேவலமாகத் திட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் செய்த காரியம்- பரபரப்பில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தான் விக்னேஷ். இவர் 'சின்னதாய்' என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். தொடர்ந்து 'கிழக்குச் சீமையிலே', 'உழவன்', 'பசும்பொன்', உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.இது தவிர ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.

நடிப்பை தாண்டி, பாஜக கட்சியின் கலை இலக்கிய பொறுப்பாளராகவும் விக்னேஷ், சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் இவர் உதவி இயக்குநர் சுபாஷ் என்பவர் தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை விக்னேஷிடம் கேட்ட போது, அவரை மிரட்டுவது போல் பேசியது மட்டுமன்றி சாதியின் பெயரை சொல்லி திட்டிருக்கினன்றார்.


இந்த வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.எனவே விக்னேஷ் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்  பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டரில் கூறி இருந்தார். மேலும் பல படங்களில் நாயகனாக, துணை கதாபாத்திரங்களாக நடித்தவர் இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏனோ, வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள்.  தமிழ்நாடு காவல்துறை இவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினருக்கும், இதனை  டேப் செய்திருந்தார்.


வன்னியரசுவின் பதிவு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நடிகரும் - பாஜக பிரமுகருமான விக்னேஷ் வன்னியரசுவை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, உதவி இயக்குநர் சுபாஷ் விஷயத்தில் தான் நடந்து கொண்டது தவறு தான் என்பதை உணர்ந்து,  பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Advertisement

Advertisement