• Jul 25 2025

வருகின்ற மே மாதம் முதலாம் திகதி இறக்கப்போகும் நடிகர்...அவரே வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம் செய்வோம், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தீ, மாத்தியோசி, அவன்இவன், மிளகா, கர்ணன், பல்லு படாமா பாத்துகோ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தவர் தான்  ஜி எம் குமார்.



இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்  பேரன்பு சீரியலில் நடித்து வருகின்றார்.. ஒரு சினிமா ஷூட்டிங்கில் நடித்து வரும் ஜிஎம் குமார், அங்கு அவர் உயிரிழப்பது போன்று காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சிகளை அண்மையில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பிணமாக படுத்தபடி, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.



இவ்வாறுஇருக்கையில்  ஜிஎம் குமார் மறைந்துவிட்டதாக தோற்றம் மறைவு போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த ஷூட்டிங்கில் ஜிஎம் குமார் பெயர் கரிய மாணிக்கம் என்று இருக்கிறது.கிடாக்குளம் கிராம மக்கள் போஸ்டர் ஒட்டியது போல் ஷுட்டிங் எடுக்கப்பட்டு உள்ளது.


 அந்த போஸ்டர் அருகில் நின்று போஸ் கொடுத்திருக்கிறார் ஜிஎம் குமார். அதில் ஜிஎம் குமார் மே மாதம் 1ம் தேதி இறக்கப்போவதாக போஸ்டரில்உள்ளது. அதாவது சினிமாவுக்காக அப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இந்த புகைப்படத்தை  பகிரிந்துள்ள ஜிஎம் குமார் ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்று ஸ்மைலி போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் முன்கூட்டியே மரண அறிவிப்பு , யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் என்று கிண்டலாக கேட்டுள்ளனர்.


ஜிஎம் குமார் வெளியிட்ட இன்னொரு பதிவில்,பிணமாக படுத்தபடி, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். எனினும் அதற்கு கொடுத்த கேப்சனில், " வந்தது தெரியும் போவது எங்கே, வாசல் நமக்கே தெரியாது, வந்தவரெல்லாம் தங்கிவிட்டால், இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும், போனால் போகட்டும் போடா..." என்று போட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement