• Jul 26 2025

ஈரமான ரோஜாவே சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்-இவருக்கு பதில் அவர் தானா..வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த தொடரில் திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அண்ணனின் கல்யாணத்தில் பெண் காணமல் போக, கடைசியில் தம்பி காதலித்தை பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார். அதுமட்டும் இல்லாமல், அண்ணன் கல்யாணம் செய்ய இருந்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார். அப்படி மாறி மாறி திருமணம் நடக்கிறது.

சரி நடந்தது நடந்து போச்சு, இனி அடுத்து என்ன என யோசித்து ஜோடிகளும் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் தொடரில் முதன்முறையாக சீரியல் மாற்றம் நடந்துள்ளது. இதில் அருணாச்சலம் என நாயகர்களின் அப்பாவாக நடித்து வந்தவரின் நபர் மாற்றம் நடந்துள்ளது.

அவருக்கு பதில் யார் அருணாச்சலம் வேடத்தில் நடிக்கிறார் என்ற புகைப்படம் இதோ,



Advertisement

Advertisement