• Jul 24 2025

‘ஜெயிலர்’ படத்தால் 8 லட்சத்தை இழந்த நடிகை!..அதிர்ச்சித் தகவலைக் கூறிய படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

மும்பையில் மாடல் அழகியாக இருப்பவர் தான் சன்னா சூரி. இவர் மும்பையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாடல் அழகியாகவும் இருக்கிறார். சமீபத்தில் புஷ்பா – 2விலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம்.இவரும் சில தினங்களுக்கு முன் பியூஸ் ஜெயின் என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. 

நாங்கள் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து பேசுவதாகவும் அந்த படத்தில் ரஜினிக்கு மகளாகவும் அவர் ஒரு போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறதுக்காகவும் ஒரு புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருப்பதாகவும் சன்னாவிடம் கூறியிருக்கிறார்.


மேலும் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்கள் என்றும் அதற்காக ஒரு போலீஸ் டிரெஸில் வீடியோ எடுத்து அனுப்பும் படியும் கேட்டிருக்கிறார். இதனையடுத்து பேசிய சன்னாவின் அம்மா இது எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் சன்னா , நெல்சன், ரஜினி என அனைவரும் இருக்கும் புகைப்பட டிசைனை எடுத்து அனுப்பியிருக்கிறார்.

அதை பார்த்து நம்பிய அந்த நடிகையின் குடும்பம் அவர் சொன்ன மாதிரி வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார். அனுப்பிய சில தினங்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபர் தொலைபேசியில் அழைத்து வீடியோவை பார்த்து ரஜினி பாராட்டினார் என்பதையும் தெரியப்படுத்தியிருக்கிறார். அதன் பின் டிக்கெட் செலவு என பிற செலவுகளுக்கு என மொத்தம் இந்த நடிகையிடம் இருந்து சுமார் 8.48 லட்சத்தை அந்த நபர் அபேஸ் செய்திருக்கிறார்.


சன்னா அவர் அனுப்பிய் அந்த டிசைனை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறேன் என்று பெருமையாக பதிவிட அதை பார்த்த ஜெயிலர் படக்குழு ஷாக் ஆகி சன்னாவை தொடர்பு கொண்டு பேசியபிறகு தான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டாராம் சன்னா.

அதன் பிறகு மும்பையில் பியூஸ் ஜெயின் மீது போலீஸில் புகார் செய்திருக்கிறார் சன்னா. அந்த நபரை தேடும் பணியில் இறங்கியிருக்கிறது போலீஸ். இந்த செய்தி இப்போது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தான் இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement