• Jul 25 2025

அதற்கு அடிமையாகி கேரியரை தொலைத்த நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது சத்தமே இல்லாமல் முன்னேறியவர்தான் அந்த  பிரபல நடிகை. சினிமா வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி இணையத்தையே கிடுகிடுக்க வைத்த அந்த நடிகைக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

அதனால் தலை கால் புரியாமல் ஆடிய நடிகை தற்போது முழு நேர குடிக்கு அடிமையாகி விட்டாராம். மேலும் அது மட்டுமல்லாமல் போதை மருந்து பழக்கமும் அவரை ஆட்டி படைத்து வருகின்றது. இதனால் சதா சர்வ காலமும் அவர் சரக்கு அடித்துக் கொண்டு கவிழ்ந்து கிடக்கிறாராம்.

எனினும் அது மட்டுமல்லாமல் அவர் இப்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த படப்பிடிப்பில் கூட கலந்து கொள்ளாமல் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருக்கிறாராம். இதனால் அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் கூட போட்டி நடிகையான மற்றொரு கவர்ச்சி புயலுக்கு சென்று விட்டதாம்.

ஏற்கனவே சில பல பிரச்சனைகளில் சிக்கி இப்போது மீண்டு வந்திருக்கும் அந்த நடிகை கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டு வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை பழக்கமும் தற்போது அளவுக்கு மீறி போனதால் நடிகையை அவருடைய குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக சிகிச்சை பெற வைக்கிறார்களாம்.

அத்தோடு நடிகைக்கு தற்போது சத்தம் இல்லாமல் மருத்துவர் சிகிச்சை நடைபெற்று வருகிறது. நடிகையின் இந்த போக்கு அவருடைய சினிமா எதிர்காலத்தையே குலைத்து விடும் என்பதால் அவருக்கு நடக்கும் சிகிச்சையை கூட ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். நன்றாக வளர வேண்டிய நேரத்தில் நடிகை இப்படி தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டதை பற்றி தான் திரையுலகில் பரபரப்பாக பேசி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement