• Sep 12 2025

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை- அடடே அப்போ அவருடைய ஜோடி அவ்வளவு தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ராகினியின் திருமண நாளன்று கோதைக்கு அர்ஜுன் பற்றிய உண்மைகள் தெரிந்ததோடு தமிழ் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதும் தெரிந்து விட்டது.

மேலும் அர்ஜுன் கோதையின் சொத்துக்களை எல்லாம் ராகினியின் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் இனிமேல் இந்த சொத்திலும் கம்பனியிலும் உங்களுக்கு உரிமை இல்லை என கோதையின் சொத்துக்களை ராகினியை வைத்து அர்ஜுன் அபகரித்து விட்டார்.


இதனால் இன்றைய எப்பிஷோட்டில் கோதை தன்னுடைய குடும்பத்தாருடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் யாருடைய வீட்டில் இவர்கள் தங்கப் போகின்றார்கள், தமிழ் கோதையை மன்னிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இந்த நிலையில் இந்த சீரியலில் அபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த சீரியலை விட்டு வெளியேறியுள்ளார். இவருக்கு பதிலாக புதியவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இன்றைய எப்பிஷோட்டில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இவர் நமச்சிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement