• Jul 24 2025

காற்றுக்கென்ன சீரியலிலிருந்து திடீரென மாற்றப்பட்ட நடிகை.. அவருக்குப் பதில் இனி இவர் தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் ரி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக போட்டி போட்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த சீரியல்கள் ஒவ்வொன்றும் பல்வேறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றது. 


அந்தவகையில் விஜய் டிவியில் தற்போது கல்லூரி வாழ்க்கை சார்ந்த தொடர் ஒன்று விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் தான். இந்த சீரியலானது கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப அழகாக எடுத்துரைத்து வருகிறது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இந்தத் தொடரானது தற்போது 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம், காதல், நண்பர்கள், லட்சியம் என சில எமோஷன்கள் கதைக்களத்தில் அமையப் பெற்றிருப்பதால் தொடர்ந்தும் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.


இந்த சீரியலில் பிரியங்கா மற்றும் சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடி வருகின்றார்கள்.  மேலும் இந்த சீரியலில் இப்போது நாயகன் மற்றும் நாயகி திருமண டிராக் ஓடுகிறது, இதில் என்னென்ன குழப்பங்கள் வரப்போகிறது என தெரியவில்லை, இதனால் அடுத்தடுத்த திருப்பங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த சீரியலில் சாரதா என்ற வேட்த்தில் ஜோதி என்பவர் நடித்து வந்தார், ஆரம்பத்தில் இருந்தே இவரது நடிப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.


இருப்பினும் தற்போது இந்தத் தொடரிலிருந்து அவர் விலகியிருப்பதாகவும்  அவருக்கு பதிலாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹர்ஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.


இதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? உடனே "இது தவறான தேர்வு, ஜோதி அழகாக நடித்து வந்தார், அவரை மாற்றாதீர்கள்" என ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை கமெண்டுகளின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement