• Jul 26 2025

லியோ படத்தில் விஜய் சேதுபதி? சந்தானம்? ரசிகர்களுக்கு கிடைத்த ஹிண்ட்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ‘லியோ’. இப்பொது, நடிகர்கள் மற்றும் படக்குழு மொத்தமும் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருக்குமா அல்லது இல்லையா என்பதை இயக்குநர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது, சில ஹிண்ட்கள் வெளியாகி, லியோ LCU-வின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. 

அந்த வகையில், தற்போது, நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், படத்தின் வசனம் எழுதும் பணியில் ஈடுபட்டு வரும் ரத்னகுமாரின் ட்வீட் தான்.

விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி லியோ படத்திலும் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது, சந்தானத்தின் கண்ணாடியை வைத்துக்கொண்டு  ரத்னகுமார் செல்பி எடுத்துள்ளதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சாண்டி, லியோ எல்.சி.யு. இருக்கா?இல்லையா? என்பது தனக்கும் தெரியாது என்றும், படத்தின் நிலைப்பாட்டை லோகேஷ் கனகராஜ் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். இதனால், லியோ படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் சந்தானம் கேரக்டரில் நடிப்பாரா? இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏற்கனவே, இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement