• Jul 26 2025

பெண் தொகுப்பாளரை தகாத வார்த்தையால் திட்டிய பிரபல நடிகருக்கு... விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபலமான மலையாள நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஸ்ரீநாத் பாசி. இவர் நடிப்பில் சமீபத்தில் 'சட்டம்பி' திரைப்படம் வெளியாகி இருந்தது. இத்திரைப்படம் தொடர்பான நேர்காணலின் போது பெண் தொகுப்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பியதாகவும், அவர் மீது சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தது. 


அதாவது யூடியூப் சேனலின் அந்த நேர்காணலை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் ஸ்ரீநாத் எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கேமராவை ஆஃப் செய்த பிறகு, பெண் தொகுப்பாளரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தகாத வார்த்தைகளால் அவர் திட்டியது மராடு காவல் நிலையத்தில் புகாராக பதிவாகி இருந்தது.

அதுமட்டுமல்லாது ஸ்ரீநாத் மீது ஒரு பெண் பாலியல் புகாரும் தெரிவித்தார். இதன் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். ஆனாலும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 


அத்தோடு ஸ்ரீநாத் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் ஸ்ரீநாத் படங்களில் நடிக்க தற்காலிக தடை ஒன்றினை விதித்தது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யாமல் அவரை பலரும் ஒதுக்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement