• Jul 24 2025

"இந்த வருஷம் நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த திரைப்படம்".. துணிவு-ஐ பாராட்டிய வெளிநாட்டு தொழிலதிபர்...!!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வெளியாகிய திரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித்தும் கதாநாயகியாக மஞ்சுவாரியாரும் நடித்திருந்தார்.இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான சிபி அமீர் பாவனி ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் அஜித் டார்க் டெவில் என அழைக்கப்படும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது .மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.


துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் துணிவு படத்தினை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கண்டு களித்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர், தமது டுவிட்டர் பக்கத்தில் துணிவு படம் குறித்து டுவிட் செய்துள்ளார். அந்த டுவிட்டில், "இந்த வருடத்தில் நான் கண்ட மிகச் சிறந்த திரைப்படம். 10/10 புள்ளிகள் வழங்குவேன்" என டுவிட் செய்துள்ளார்.


மேலும் தொலைக்காட்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் துணிவு படத்தினை பார்த்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஜூபாகோ எனும் விளையாட்டு App இணை நிறுவனராக தன்னை அந்த நபர் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement