• Jul 25 2025

எதிர்நீச்சல் சீரியலில் பெரிய டுவிஸ்ட் - குணசேகரனின் மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் காதலியா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல்  தற்போது டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. 

எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும் கேரக்டர் என்றால் அது ஜீவானந்தத்தின் கேரக்டர் தான். குணசேகரனுக்கே அல்வா கொடுத்து அவரின் சொத்தை தன் வசப்படுத்தி இருக்கும் ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்துகொள்ள தான்  ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 

அந்தவகையில் பட்டம்மாவின் சொத்து முழுவதும் தன் பெயரில் வந்துவிடும் என்கிற கனவோடு இருந்த குணசேகரனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சொத்தை அபகரித்து விட்டார் ஜீவானந்தம். அவர் எதற்காக பட்டம்மாவின் சொத்தை அபகரித்தார்? இதையடுத்து குணசேகரன் என்ன செய்யப்போகிறார்? சொத்து விஷயத்தில் குணசேகரனுக்கு ஜனனி உதவுவாரா? என்கிற பல்வேறு திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜீவானந்தம் யார் என்கிற சுவாரஸ்ய தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி குணசேகரனின் மனைவியான ஈஸ்வரி, கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலித்திருப்பர் . அந்த நபர் ஒரு சமூக போராளியும் கூட, இவர்களது திருமணத்துக்கு ஈஸ்வரியின் தந்தை சம்மதிக்காததால், வேறுவழியின்றி குணசேகரனுக்கு மனைவியாகிவிடுகிறார்.

அந்தவகையில் தற்போது சீரியலில் எண்ட்ரி கொடுத்திருக்கும் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் காதலனாக இருக்குமோ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. ஏனெனில் அவரின் தோற்றம் அந்த காதலனின் தோற்றத்தோடு ஒத்துப் போகிறது. அதுமட்டுமின்றி இவரும் ஒரு சமூக போராளி என தன்னைக் காட்டிக்கொள்கிறார். 

இந்த விவரம் தெரியாமல் ஜீவானந்தம், குணசேகரனின் ஆளாக இருக்கும் என சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அவருக்கு ஜீவானந்தம் யார் என்பது தெரியவரும் காட்சி தான் செம்ம டுவிஸ்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்/


Advertisement

Advertisement