• Jul 26 2025

அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பெண் பிரபலம்.. பெரும் பரபரப்பில் திரையுலகம்...ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஓடிடி பிரபலம் உர்ஃபி ஜவேத் அதிரடியாக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நான் என்ன டிரெஸ் போடுகிறேன் என்பது என் விருப்பம் என இந்தியாவில் பல இடங்களில் பத்திரிகையாளர்களுடன் சண்டை போட்டு வந்த உர்ஃபி ஜாவேத் அதே போல நினைத்துக் கொண்டு துபாயிலும் படு ஆபாச உடையுடன் வலம் வந்த நிலையில் திடீரென  கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் அவரது கைதுக்கான காரணங்கள் தான் ரொம்பவே ரசிகர்களை ஷாக் ஆக்கிஉள்ளது.டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது போல்டான பேச்சாலும், உடையாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தார். எனினும் தற்போது சன்னி லியோனின் ஸ்ப்லிட்ஸ் வில்லா எனும் ரியாலிட்டி ஷோவில் நடித்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் எக்ஸ்ட்ரா கிளாமர் உடைகளுடன் வீடியோக்கள் வெளியிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.


வெறும் ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டப்படியும், இரு மார்பகங்களில் மட்டுமே சின்னதாக ஆடை அணிந்தும், டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் பல விதமான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தி வந்த உர்ஃபி ஜாவேத்தின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கணக்கு இஷ்டத்துக்கு அதிகரித்து வருகின்றன.

எனினும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் சேத்தன் பகத் உர்ஃபி ஜாவேத் இந்திய இளைஞர்களை மனதளவில் கெடுத்து வருகிறார் என பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்க நினைத்த உர்ஃபி ஜாவேத் மீடூ சமயத்தில் வெளியான சேத்தன் பகத்தின் வாட்ஸ்அப் லீலைகளை இன்னொரு முறை வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்.


உர்ஃபி ஜாவேத்துக்கு பெயர் பிரச்சனை காரணமாக பாஸ்போர்ட் வழங்குவதில் சிக்கல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.அத்தோடு  உடனடியாக laryngitis எனப்படும் குரல்வளை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுக்க துபாய் சென்ற இடத்தில் உர்ஃபி ஜாவேத்தை துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிக் பாஸ் பிரபலம், டிவி நடிகை என இத்தனை பெரிய செலிபிரிட்டியான உர்ஃபி ஜாவேத்தை திடீரென துபாய் போலீஸ் கைது செய்வதற்கு என்ன காரணம் என விசாரித்தால், அவர் அணிந்திருந்த ஆடை மட்டும் பிரச்சனை இல்லையாம். இவ்வாறுஇருக்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தேவையில்லாமல் வெட்ட வெளியில் உடல் பாகங்கள் தெரியும் அளவுக்கு மோசமான உடையுடன் வீடியோ எடுத்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

Advertisement

Advertisement