• Jul 24 2025

மறைந்த நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.! கதாநாயகி யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா உலகில்  ஒரு பிரபலம் மறைந்த பின்னர் ​​அவரது வாழ்க்கையினை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மறைந்த நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக உருவாக்க  ஒரு தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் மிகவும் பழம்பெரும் நடிகையான ஜமுனா சில தினங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். அவர் உயிரோடு இருந்தபோதே அவரது வாழ்க்கையை படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திரைக்கதை தற்போது எழுதி முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து இன்னும்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், அது குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளத. ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவும் அந்த கேரக்டரில் நடிக்க மில்க்கி பியூட்டி தமன்னாவை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் அணுகி உள்ளதாக கவல் வெளியாகியுள்ளது.

 ஜமுனா கேரக்டரில் நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்குப் பிறகு, ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க சில டோலிவுட் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது.



மறைந்த நடிகை ஜமுனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலும், தமிழில் தங்கமலை ரகசியம், நிச்சயதாம்பூலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி தமிழிலும் ஐம்பது, அறுபதுகளில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.


Advertisement

Advertisement