• Jul 25 2025

பிரபல தியேட்டரை படுகேவலமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்...தீயாய் பரவும் பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது பிரபல சினிமா விமர்சகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். ஒரு படம் புதிதாக ரிலீஸ் ஆகிலும் சரி, ஒரு புது பிரச்சினை உருவாகிலும் சரி அந்த இடத்தில் ப்ளூ சட்டை மாறனின் கருத்தினை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஏராளம். 

அந்த அளவிற்கு தியேட்டரில் இருந்தே விமர்சனங்கள் மக்கள் மத்தியில் சுலபமாக சென்றுவிடுவதால் பாதி கூட்டம் நல்லா இருக்கோ இல்லையோ விமர்சனத்தை சமுகவலைத்தளத்தில் பார்த்து போகலாம வேண்டாமா என்று முடிவெடுத்து விடுகிறார்கள்.



இவர் எதற்கும் துணிந்தவர். எந்த உயர்ந்த இடத்தில் இருப்பவர்களையும் கூச்ச சுபாவமோ, பயமோ இன்றி தைரியமாக விமர்சித்துப் பேசக் கூடியவர். தன் யூடியூப் சேனல் மூலம் படுமோசமான வார்த்தையில் விமர்சனம் என்ற பெயரில் கலைஞர்களின் தனிப்பட்ட மற்றும் உடல் ரீதியாக தாக்கி விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

எனினும் சமீபத்தில் கூட சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக இயக்குநர் கெளதம் மேனன் வெச்சு செய்யனும் என்று கூறியது ப்ளூ சட்டை மாறனை வம்புக்கு இழுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி ப்ளூ சட்டை மாறனும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  சென்னையில் பிரபலமான திரையரங்கு என்று கூறப்படும் ரோஹினி தியேட்டர் மிகவும் சிறியதாக பார்க்கையில் LED Tv போல் இருக்கிறது. இதனை படுகேவலமான நெட்டிசன்கள் விமர்சித்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் புகைப்படத்தோடு விமர்சித்துள்ளார்.





தற்போது இதேபோல் இருக்கும் தமிழக தியேட்டர்களின் நிலைமையையும் நெட்டிசன்கள் அதில் பகிர்ந்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement