• Jul 25 2025

இஸ்ரேல், பாலத்தீனா போரினால் நாகினி சீரியல் நடிகையின் உறவினருக்கு ஏற்பட்ட கொடூரம்- இப்படிப் பண்ணீட்டாங்களே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாடுகள் அனைத்திலும் பேசு பொருளாக இருப்பது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இடம்பெறும் போர் பற்றியே இருக்கின்றது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த போரில்  சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் இந்த போரில் நாகினி சீரியலில் நடித்து பிரபலமான இந்திய சீரியல் நடிகை மதுரா நாயக்கின் உறவுக்கார பெண்ணும் அவரது கணவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக கதறி அழுது பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது. அந்த இருவரையும் அவர்களது குழந்தைகளின் கண் முன்னே கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.


அந்த இழப்பால் எங்கள் குடும்பமே மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது என வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். இஸ்ரேல் நாட்டில் இருந்து பிரபல பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக நாடு திரும்பிய நிலையில், நல்லவேளை உயிர் தப்பினேன் எனக் கூறியிருந்தார்.


இந்நிலையில், நாகினி சீரியலில் நடித்துள்ள நடிகையின் உறவினர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யூதர்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற வெறி பல காலங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது பாலஸ்தீனத்தை ஒட்டுமொத்தமாக தகர்க்க தொடர்ந்து இஸ்ரேல் முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.


Advertisement

Advertisement