• Jul 24 2025

அஜித்தை படுகேவலமாக திட்டிய பிரபலம்.. வீடியோவை பார்த்து திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்துள்ளார். 

இப் படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக களமிரங்கவுள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  துணிவு படத்தின் முதல் பாடல் நேற்று முன் தினம் 9 ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது.அத்தோடு  சில்லா சில்லா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிற்து. 

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அஜித்தை பற்றி படுகேவலமாக பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மேலும் அதில் வட இந்திய தயாரிப்பாளருக்கு அஜித் வாய்ப்புகள் அடுத்தடுத்து கொடுப்பதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கே ராஜன், அவரு கொஞ்சம் கூட நடந்து வந்து மக்களை சந்தித்தால் அவரை பார்த்து சொல்லலாம்.

பாத்ரூமில் இருந்து வந்து அப்படியே காரில் ஏறி ஷூட்டிங் போரார். அத்தோடு எந்த உலகத்தை பற்றியும் கவலைப்படாமல் சொந்த ரசிகர்கள் காசில் வாழ்ந்து வரும் எந்த நடிகரையும் நான் மதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார. இதற்கு அஜித் ரசிகர்கள் கே ராஜன் அவர்களை மோசமாக இணையத்தில் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement